Applications for Long Lending Open

Payanmaram Trust has grown because of many wonderful people. We are happy to let you know that the applications for long lending are open again. 

Government Law College, Coimbatore – Feb 2025

4இலவச நீண்டகாலக் கடனாக புத்தகங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி: 09-02-2025 இறுதித் தேதி: 14-02-2025

 அன்புள்ள மாணவர்களே,

பயன்மரம் அறக்கட்டளையின் ‘நம்ம வாசகசாலை மற்றும் நூலகத் திட்டத்தின்’ சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்!

இலவச நீண்ட காலக் கடன் (லாங் லெண்டிங்) என்பது நூலகங்களின் வழக்கமான செயல்முறையைப் போன்றது. இத்திட்டத்தின்படி, குறைந்த அளவு குடும்ப வருமானம் உள்ள மாணவர்களுக்கு, நீண்ட காலத்திற்கு அதாவது செமஸ்டர் தொடக்கம் முதல் இறுதி வரை நீண்டகாலக் கடனாக புத்தகங்களைத் தருகிறோம். 

உங்களிடமிருந்து 09-02-2025 முதல் விண்ணப்பங்களைப் பெறுவோம். அது 14-02-2025 அன்று முடிவடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தயவுசெய்து படிவங்களை இந்த இணையதளத்தில் இந்த இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பங்களைப் பெற்றபின், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படும். அத்துடன் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு, நிதி திரட்டுதல் போன்ற பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, காலக்கெடுவைத் தவறவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நீண்டகாலக் கடனாக புத்தகங்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

  1. ஒரு புத்தகம் என்பது நமது சொத்து, பொக்கிஷம் மற்றும் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும் ஒன்றாகும். ஆகவே, உங்களால் புத்தகத்தை சொந்தமாக வாங்க முடிந்தால், தயவுசெய்து வாங்கிக் கொள்ளவும். தங்களது பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக புத்தகங்களுக்குச் செலவு செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் நாங்கள் உதவ முயல்கிறோம்.
  2. தேவையான ஆவணங்கள்:
      • வருமானச் சான்றிதழ் / இறப்புச் சான்றிதழ் (இருப்பின்)
      • கல்லூரி அடையாள அட்டை/கல்லூரி ரசீது நகல்
      • முகவரிச் சான்று
      • வேறு ஏதாவது சிறப்புப் பிரிவினருக்கான சான்று (எ.கா மாற்றுத் திறனாளி சான்றிதழ்)
  3. நீண்டகால புத்தகக் கடன் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக குடும்ப வருமானம் உள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  4. இந்தப் படிவங்களை கவனமாக நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். புத்தகங்களின் பெயர், ஆசிரியர், பாடமொழி (தமிழ்/ஆங்கிலம்) போன்ற விவரங்களை முழுமையாகவும் தெளிவாகவும் உங்கள் தேவையின் வரிசையில் குறிப்பிடவும். முழுமையற்ற மற்றும் கவனக்குறைவாக நிரப்பப்பட்ட படிவங்கள் நிராகரிக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை அல்லது எங்கள் தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  5. இத்திட்டத்திற்காகத் திரட்டப்பட்ட நிதியின் அடிப்படையில்,  நீங்கள் பட்டியலிட்ட வரிசையில் புத்தகங்களை வழங்குவோம்.
  6. நீண்டகாலக் கடனில் பெற்ற புத்தகங்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதே தலைப்பில்/ஆசிரியர் கொண்ட புதிய புத்தகத்தைக் கொண்டு அதை  ஈடுகட்ட வேண்டும்.
  7. எங்கள் நிதி இருப்புக்கு ஏற்ப விண்ணப்பங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.
  8. விண்ணப்பங்களின் பரிசீலனை முறை
    1. இது தற்போது எங்கள் கடன் வழங்கும் திட்டத்தில் இருப்பில் உள்ள புத்தகங்களின் பட்டியல். – நீண்ட கடன் வழங்குவதற்கான புத்தகங்களின் தற்போதைய பட்டியலுக்கான இணைப்பு. இதில் உள்ள புத்தகங்களைத் தவிர கூடுதல்/புதிய புத்தகக் கோரிக்கைகளின் ஏற்பானது எங்கள் நிதியிருப்புக்கு உட்பட்டது. புத்தகங்களின் தற்போதைய பட்டியலுக்கான இணைப்பு.
    2. வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வருமானம், பிற சமூகப் பொருளாதார சூழ்நிலை போன்ற அளவுகோல்களின் வரிசையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்வு அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் இருந்தால், முதலில் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
    3. எங்களால் இயன்றவரை உதவ முயன்றாலும், நாங்கள் குறைந்த அளவே நிதியைக் கொண்ட ஒரு சிறிய, வளரும் அமைப்பாக இருக்கிறோம். உங்கள் கோரிக்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் உங்கள் புரிதலையும் ஆதரவையும் கோருகிறோம்.

இதுவரை உங்களுக்கு உதவ முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டும் அதைத்தொடர விழைகிறோம். இத்திட்டத்தைச் சாத்தியமாக்க உதவிவரும் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு எங்கள் நன்றி.

அன்புடன்,
நிர்வாக அறங்காவலர்

APPLICATIONS OPEN FOR FREE LONG LENDING (BOOK LENDING)

Opening Date: 09-02-2025 Closing Date: 14-02-2025

Dear Students,

Greetings from Payanmaram Trust’s “Our Reading Room cum Library” Project!

Long Lending is like regular lending by Libraries except that we lend only to those who are in the low-income group and that we lend it for a longer duration, that is, from the beginning to end of semester. 

We are happy to inform you that we will be receiving applications from you starting 09-02-2025 and the same will close on 14-02-2025. Kindly fill up the Online Application in this link.

Once the application closes, the applications are scrutinized, budgets estimated, fund raised and so on. Hence, we request you to not miss the deadlines. The following are the guidelines for receiving the books on long lending:

  1. A book is an asset and treasure and is always useful. If you can buy the book, please do. If you cannot spend on books due to your economic situation, please don’t worry, we are here to help you.
  2. Documents Required:
    1. Income certificate/Death Certificate (if any)
    2. College ID Card/Copy of College Receipt
    3. Address Proof
    4. Any other proof of special reservation or quota, say PWD (People With Disabilities)
  1. The Income Cutoff Limit set this year is Rs 2.4L per annum for Our long lending programme.
  2. We request you to fill out these forms carefully. Please fill up details of books with clear name of the Book, Author, medium (i.e. Tamil/ English) and in the order of preference. Incomplete and carelessly filled forms will be rejected. We request you to reach out to us or our volunteers in case you have any questions. You can find the Online Application in this link.
  3. Based on funds raised towards the same, we will grant books in the order in which you have listed them.
  4. In case books on lending are lost or damaged, you are required to replace it with the new book of the same title/author.
  5. Applications may be granted partly or wholly or rejected subject to availability of funds.
  6. Selection Process: 
    • This is the list of books available in our lending pool right now – Link to Present list of books available for Long Lending. Additional/New Book requests other than the books in the lending pool are subject to availability of funds
    • Applications will be selected in the order of criteria like income followed by other socio economic situation based on documents provided. In case there is more than one application satisfying the selection criteria, priority will be given to the application received first.
    • While we will do our best, we are a small organization with limited funds and we request your understanding and support in case we are unable to entertain your request.

We are glad we have been able to help many of you so far and hope to do the same this Semester too. We thank the volunteers and donors who have helped make this project a possibility. Thank you.

Best Regards,

Managing Trustee

Want to Help Make Things Like This?
Come Donate or Volunteer!

Share This